கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் திரு ரமேஷ் ஐயா அவர்கள் முயற்சியில், காவல் நிலைய வளாகத்தில், அறிவகம் திறக்கப்பட்டது. அந்த நிகழ்வில், நம் பள்ளி காவேரி வாசிப்பு இயக்கம் மாணவர்கள் கலந்து கொண்டு, புத்தக விமர்சனம் செய்தனர். தாங்கள் எழுதிய புத்தகங்களை, அறிவகத்திற்குத் தானம் அளித்தனர்.
அறிவகத்தில், எங்கள் பள்ளி மாணவர்களின் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்யும் விரைவுக் குறியீட்டுத் தாளை கல்லூரி மாணவர்கள், ஸ்கேன் செய்து, புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து வாசித்தனர்.
இந்நிகழ்விற்கு எங்களை வரவேற்ற
ஆய்வாளர் திரு ரமேஷ் ஐயா அவர்களையும், உதவி ஆய்வாளர் கவிமுகில் அவர்களையும் பாராட்டி, நன்றியுரைக்கிறோம்