Sunday, January 25, 2026

சென்னைப் புத்தகக் காட்சி 2026

 சென்னையில், 2026 ஆண்டுக்கான, 49 ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் நம் பள்ளி சார்பாக, 2000 புக்மார்க்குகள் தயாரித்து அளிக்கப்பட்டன.


இப் புத்தகக் காட்சிக்கு, நம் பள்ளி ஓவிய ஆசிரியை திருமதி ம.சாந்தினி அவர்கள் உதவியால், காவிரி வாசிப்பு இயக்க மாணவர்களுடன் ஓவிய மாணவர்கள் இணைந்து, புக் மார்க் தயாரித்து தந்தனர். அம் மாணவர்களுக்கு நன்றி















.

இப் புக் மார்க்குகள், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் முன்னிட்டு பல முன்னணி பதிப்புகங்கள் வழியாக வாசகர்களுக்கு அளிக்கப்பட்டன










மேலும் நம் பள்ளி காவேரி வாசிப்பு இயக்கம் மாணவர்கள் எழுதிய புத்தகங்கள், தும்பி புத்தக அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.




பொதுமக்களும் சிறுவர்களும் நம் மாணவர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி சென்றனர்




அது மட்டும் அல்லாமல்,
நம் பள்ளி மாணவர்கள் ஸ்கேன் செய்து தந்த அரிய நூல்கள், பரிசல் பதிப்பகம்  (மலர் புக்ஸ்) வழியாக , மீண்டும் உயிர் பெற்றுள்ளன.
புத்தகத்தில் நம் பள்ளிக்கும் மாணவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.







நம் பள்ளி மாணவர்கள் செய்த புக் மார்க்கை பாராட்டி,
தி இந்து ஆங்கில நாளிதழ் (சென்னைப் பதிப்பு) செய்தி வெளியிட்டுள்ளது
























Monday, January 5, 2026

புத்துயிர் பெற்ற புத்தகங்கள்

 நம் பள்ளி, குமரசாமி நினைவு நூலகத்தில் உள்ள, மிக அரியதான, காப்புரிமை அற்ற மொழிபெயர்ப்பு நூல்கள், மாணவர்களால் படி எடுக்கப்பட்டு, நம் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  

இந்த நூல்களைப் பதிவிறக்கம் செய்ததுடன், படியெடுத்த மாணவருக்கு நன்றி செலுத்திய பரிசல் பதிப்பகம், சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026க்கு, இந்த அரிய நூல்களை, மறு பதிப்பு செய்து, மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. 

அரிய நூல்களைப் படி எடுத்துக் கொடுத்த மாணவர்களுக்கும், இந்த நூல்களை மறு பதிப்பு செய்த பரிசல் பதிப்பகத்திற்கும் மிக்க நன்றி.




மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...