Thursday, February 27, 2025

MY DREAM STORY - BOOK RELEASE

எங்கள் பள்ளி மாணவர்கள், இளம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் எழுதிய கதைகள், என் கனவின் கதை என்ற பெயரில் வெளியானது. தற்போது, வி.ஆர்.தேவிகா மற்றும் லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மொழிபெயர்ப்பில், MY DREAM STORY என்ற பெயரில் மின் புத்தகமாக, மைசூரில் வெளியிடப்பட்டது. 

நாளை இம் மின்னூல் புத்தக வடிவில் வெளியிடப்படுகிறது. இப்புத்தகத்தை வெளியிட, பால புரஸ்கார் விருது பெற்ற  சிறார் எழுத்தாளர் திரு. யெஸ். பாலபாரதி வருகிறார். அவரின் புதிய புத்தகமான ஆளுக்குப் பாதி என்ற சிறார் கதைகளையும் வெளியிட்டு, சிறார்களும் கதைகளும் என்ற தலைப்பில் பேச உள்ளார்.  





Tuesday, February 18, 2025

MY DREAM STORY

வணக்கம்.  


எங்கள் பள்ளி மாணவர்கள் எழுதிய கதைகள் என் கனவின் கதை என்ற பெயரில் வெளியானது. தற்போது எஸ்.ஆர்.தேவிகா மற்றும் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில், ஸ்ரீகாயத்ரி எடிட் செய்த இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

இந்த மின்புத்தகம் RIE, MYSURU -CCSL  நிறைவு நாளன்று வெளியிடப்பட்டது. 

இம்மின்னூலை வெளியிட அனுமதி தந்து வெளியிட்ட, திரு முனைவர் எஸ். நாகராஜா அவர்களுக்கு நன்றி. நிகழ்வில், இந்த மின் நூலை, இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்க, அனைவருக்கும் QR CODE SLIP தரப்பட்டது.

கீழ்க்காணும் படத்தினைச் சொடுக்கிப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


PLEASE CLICK ON  THE IMAGE, DOWNLOAD THE EBOOK AND SHARE TO  ALL.







Saturday, February 15, 2025

புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் பாராட்டு

சென்னைப்  புத்தகக் கண்காட்சியில் (2025), நம் காவேரி வாசிப்பு இயக்க நூல்களைக் குறித்து, புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் அறிமுகம் செய்ததோடு அல்லாமல், நம்பிக்கை
 பள்ளி மாணவர்களின் புத்தகங்களை பாராட்டியது











மைசூர் RIE இல் பாராட்டுதல்



 நம் பள்ளி மாணவி SRI GAYATHRI எழுதிய PARROT HOUSE எழுதிய புத்தகங்களை குறித்து, மைசூர் RIE இல், CCSL பயிற்சியில்,  (15/02/25) நூலகர் முனைவர் திரு S.நாகராஜா அவர்கள் பாராட்டினார்.

நூல் அறிமுகம்

குமாரசாமி நினைவு அலுவலகத்தில், நடைபெறும் புத்தக அறிமுக கூட்டத்தில் மாணவர்கள் எழுதும் கட்டுரைகள்,  இணைய இதழ்களில் வெளியாகின்றன.  எங்கள் நூலக ...