Saturday, March 1, 2025

MY DREAM STORY BOOK - RELEASE


 நம் பள்ளி மாணவர்கள் எழுதிய என் கனவின் கதை என்ற புத்தகம், பால புராஸ்கர் விருது பெற்ற, சிறார் எழுத்தாளர் யெஸ். பாலபாரதி, 28/02/25 அன்று வெளியிட்டார்.


சிறார்களும் கதைகளும் குறித்து, மாணவர்களுடன் உரையாடினார். முதன் முதலில், தேன்சிட்டு இதழில், முதல் கதை எழுதிய ஜெ. ஹேமாவைப் பாராட்டினார்.








இந்த நூலைத் தொகுத்த ஸ்ரீ காயத்ரி என்கிற சா . ஹரிணியையும், மொழிபெயர்ப்பாளர் வி.ஆர்.தேவிகா & லதா ராமகிருஷ்ணனையும், இலவசமாக வடிவமைத்து கொடுத்த அழிசி ஸ்ரீனிவாசா கோபாலனையும்  பாராட்டினார். உடன் அஸ்தினாபுரம், ஒரு ஊர்ல கதை மன்ற ஒருங்கிணைப்பாளர்,  ஆசிரியர் திருமதி சித்ரா அவர்களும், என் கனவின் கதை மாணவர் படைப்பாளிகளையும் மொழிபெயர்ப்பாளர்களையும் மாணவரைப் பாராட்டினார்.






No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...