Saturday, April 19, 2025

வாண்டுமாமாவின் நூல்கள்

 அதிசய வீணை

அனைவருக்கும் வணக்கம். இன்று வாண்டுமாமா நூற்றாண்டு நடைபெறுகிறது. நம்பள்ளியிலும் இவ்விழா நடைபெறுகிறது. வாண்டுமாமா 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய புத்தகப் பட்டியலில் இடம்பெறாத நூல்கள் (அதிசயவீணை, மானம் காத்த மங்கையர்கள்) இரண்டு நம் குமரசாமி நினைவு நூலகத்தில் உள்ளன. இவ்விரண்டையும் பதிவிறக்கம் செய்து வாசிக்க, அப்புத்தகங்களின் அட்டைப் படத்தினைச்சொடுக்கவும்.



அதிசயவீணை நூலினைப் படி எடுத்த மாணவி கா.தவவர்ஷினிக்கு நன்றி.


மானம் காத்த மங்கையர் நூலினைப் படியெடுத்த 
மாணவி ம.அபிராமிக்கு நன்றி


நம் குமரசாமி நினைவு நூலகத்தில் இருந்த வாண்டுமாமாவின் அதியசயவீணை நூலின் படியினைப் பெற்று, அதைக் குறித்து நீண்ட கட்டுரை எழுதியது மட்டுமல்லாமல், நம் நூலகத்திற்கு நன்றி செலுத்திய சாகித்ய அகாதெமி எழுத்தாளர் திரு பாவண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

BOOKDAY.INஇணையதளத்தில், 
இந்நூல் குறித்து, எழுதிய கட்டுரையை வாசிக்க 
கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.








No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...