Tuesday, April 22, 2025

உலகப்புத்தகத் தின விழா






இன்று  உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள்  தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொலிகள்) அனுப்பலாம்.





நம்பிக்கை நட்சத்திரம் - உர்துக் கதைகள்

1967இல்,  21 உருது எழுத்தாளர்களின் கதைகள், முக்தார் அவர்களின் மொழிபெயர்ப்பில்,  அருணோதயம் வெளியீடாக, நம்பிக்கை நட்சத்திரம் சிறுகதைத்தொகுதி வந்துள்ளது.

உலகப் புத்தகத் தினம் (23.04.25) முன்னிட்டு, இப்புத்தகத்தை வாசிக்கவும் தரவிறக்கம் செய்து பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்


இப்புத்தகத்தைப் படி எடுத்து அளித்த ம.அபிராமிக்கு நன்றி.


Monday, April 21, 2025

வாண்டு மாமா நூற்றாண்டு விழா

இன்று மாலை, வாண்டு மாமா நூற்றாண்டு விழா, குமாரசாமி நினைவு நூலகத்தைச் சேர்ந்த காவிரி வாசிப்பு இயக்க எழுத்தாளர்கள், வாசகர்கள்,  ஆண்டு பொது தேர்வு முடிந்த பின் கலந்து கொண்டனர்.  

தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில்,  ஓவிய ஆசிரியை திருமதி மா.சாந்தினி அவர்களின் நெறியாள்கையில், உடற்கல்வி ஆசிரியர் திரு ரத்னவேலு ஐயா அவர்களின் உதவியுடன்  இந்நிகழ்வு நடந்தேறியது.


ஓவிய ஆசிரியை திருமதி மே.சாந்தினி அவர்கள், AI உருவாக்கிய, வாண்டு மாமா புத்தக அட்டை ஓவியங்கள் கீழே:







மாணவி தவவர்ஷினி, வாண்டு மாமாவின் புத்தகப் பட்டியலில் இல்லாத, எங்கள் நூலகத்தில் இருந்த அரிய நூலான, 
"மானம் காத்த மங்கையர்" நூல் குறித்துத் தான் எழுதிய கட்டுரையை வாசித்தார்.  
அக்கட்டுரை, bookday.in  ற்கு அனுப்பப்பட்டுள்ளது.





நிகழ்வில், டைம்ஸ் ஆப் இந்தியாவில், 
வினோத் குமார் எழுதிய
வாண்டு மாமா பற்றிய கட்டுரை அறிவிப்புப் பலகையில், நூலகத்தில் ஒட்டப்பட்டது.



நிகழ்வில், தி இந்து தமிழ் திசையில், வாண்டு மாமா குறித்து ஆதி வள்ளியப்பன் எழுதிய கட்டுரை வாசிக்கப்பட்டது.




நிதழ்வில் கலந்து கொண்ட காவேரி வாசிப்பு இயக்க மாணவ மாணவர்கள்















வாண்டு மாமாவின் அதிசய வீணை, மானம் காத்த மங்கையர் ஆகிய  இரு நூல்கள், எங்கள் பள்ளி நூலக வலைப்பூவில், மின் நூலாகப் பதிவேற்றப்பட்டன.

மானங் காத்த மங்கையர் புத்தகத்திற்கு முகப்பு அட்டை ஓவியத்தை, மாணவி பா.சண்முகபிரியா வரைந்தார்.





எத்தொழிலை நான் தேர்ந்தெடுப்பேன்?

விளதீமிர் மயக்கோவ்ஸ்கி எழுதிய எத்தொழிலை நான் தேர்ந்தெடுப்பேன்? என்ற ருஷ்ய சிறார் நூல், தமிழில் 1985ஆம்ஆண்டு  வெளியானது. இந்த அரிய நூலைத் தரவிறக்கும் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.


இந்நூலைப் படி எடுக்க உதவிய 
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  நூலகத்திற்கு நன்றி
இந்நூலினைப் படி எடுத்து அளித்த
எங்கள் பள்ளி மாணவி பா.சண்முகபிரியாவிற்கு நன்றி


Sunday, April 20, 2025

வாண்டுமாமா நூற்றாண்டு விழா

வாண்டு மாமா  நூற்றாண்டுவிழா

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக, நம் பள்ளியில், வாண்டுமாமா நூற்றாண்டுவிழா, குமரசாமி நினைவுநூலகத்தில் நடைபெறுகிறது. அதற்கான நிகழ்ச்சிநிரல் கீழே தரப்பட்டுள்ளது. அவருடைய மின்னூல்கள் நம் வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ளன. 






ஓட்டமும் நடையும் - கு.ப.சேது அம்மாள்

தமிழில் முதன்முறையாகச் சிறுகதைத் தொகுதி வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற சிறப்பைப் பெற்ற கு.ப.சேது அம்மாள், கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவருடைய அண்ணன்தான் கு.ப.ரா. மூன்று தலைமுறைக் குடும்பத்தின் வாழ்வையும் வரலாற்றையும் விரிவாகக் கூறும் இந்த  அரிய நூல், 1972ஆம் ஆண்டு அறிவுச்சுடர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

இந்த  அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும்  கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.


இந்த அரிய நூலினைப் படி எடுக்க அனுமதி தந்த
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நன்றி

இந்த அரிய நூலைப் படி எடுத்துத் தந்த
எங்கள் பள்ளி மாணவி சீ. அருந்ததிக்கு நன்றி


மூன்று தடியர்கள்

மூன்று தடியர்கள் என்ற ருஷ்ய சிறார் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் திரு.பூ.சோமசுந்தரம் ஆவார். இது குழந்தைகளுக்கான நாவல் என்ற குறிப்பு உள்ளது. இந்த நூல் 1985ஆம் ஆண்டு தமிழில் வெளியாகியுள்ளளது. இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.


இந்த அரிய நூலைப் படி எடுக்க அனுமதி தந்த
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நன்றி

இந்த அரிய நூலைப் படி எடுத்த 
எங்கள் பள்ளி மாணவி கா. தவ வர்ஷினிக்கு நன்றி.


உலகப்புத்தகத் தின விழா

இன்று  உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள்  தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொல...