Friday, August 15, 2025

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், துமிலன் 121 வது பிறந்தநாள், கி.ரா.கோபாலன் நினைவு நாள் கொண்டாடப்பட்டது.  அவர்களின் சிறார் கதைகளை வாசித்தலும் சொல்லுதலும் நிகழ்ந்தது.  மேலும் சுதந்திரப் போராட்டம் குறித்த நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.


ந பிச்சமூர்த்தியின் கதைகளுக்கு
மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்





அரிய நூல்களின் காட்சி


ந.பிச்சமூர்த்தி, துமிலன், கி.ரா.கோபாலன்
குறித்து மாணவர்கள் உரையாற்றுதல்
















பேசும் கிளிகள் - வெளியீட்டு விழா

இன்று, சுதந்திர தின விழா முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்க மாணவர்கள் எழுதிய, பேசும் கிளிகள் (கதைத் தொகுதி)நூல் வெளியிடப்பட்டது. ஏழாம் வகுப்பு மாணவி ராகவி வெளியிட்டார். நிகழ்வுக்கு இடையில், தலைமை ஆசிரியை  க.சரவணகுமாரி அவர்கள், மாணவ எழுத்தாளர்களை வாழ்த்தினார். தொடர்ந்து எழுதும்படி, மாணவ எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தினார்.

முடிவில் பேசும் கிளிகள் தொகுப்பாளர்கள் வெ.கற்பகலக்ஷ்மி - பி.சந்தோஷ் நன்றி கூறினர். 









(தொகுப்பாளர்கள்
பி.சந்தோஷ் - வெ.கற்பக லக்ஷ்மி)



















Thursday, August 14, 2025

வழித்துணை - ந.பிச்சமூர்த்தி

 வணக்கம்.

ந.பிச்சமூர்த்தி அவர்களின் 125வது பிறந்தநாள் முன்னிட்டு, அவருடைய வழித்துணை என்கிற கவிதைநூலைப் பதிவேற்றுகிறோம். 

வழித்துணை நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்க, கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.

படி எடுத்தவர்- சீ.கௌதம், ஒன்பதாம் வகுப்பு



பேசும் கிளிகள்

பேசும் கிளிகள்  - சிறுகதைப் புத்தகம்

வணக்கம். இன்று சுதந்திரத் தின விழா. 

காவேரி வாசிப்பு இயக்கத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலைவேளையில், குமரசாமி நினைவு நூலகத்தில்,  கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம் நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறையின்  வாசிப்பு இயக்கத்திற்காகக் கதைகள் எழுதத் தொடங்கினோம்.  இரண்டு வாரம் கதை எழுதும் பயிற்சி நடந்தது.   தூலிகா, ஏகலைவா, பிரதம் புக்ஸ், வானம் பதிப்பகம், நேஷ்னல் புக் டிரஸ்ட், சில்ரன் டிரஸ்ட் புக் ஆகியவற்றின் சிறார் நூல்கள்,  எங்கள் பள்ளிக்கு  இந்தியன் லிடெரரி பிராஜெக்ட் வழியாகக் கிடைத்தன. ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை வாசித்திருக்கிறோம். மூன்றாம் கட்டப் புத்தகங்களை 16 அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் ஒன்று எங்கள்  பள்ளி முன்னாள் மாணவி சா.ஹரிணி எழதிய என் நண்பர்கள் எங்கே? புத்தகம். இன்னொன்று எங்கள் பள்ளி முன்னாள் மாணவர் அ.அன்புசெல்வன் எழுதிய பூக்களின் அமைதி. இரண்டு பேரும் காவிரி வாசிப்பு இயக்கத்தில்  உருவானவர்கள். இவைதான் எங்களுக்கு எழுதுவதற்கான உத்வேகத்தைக் கொடுத்தன.

எங்கள் கனவின் கதைத் தொகுதி அடுத்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இத்தொகுதி வந்துள்ளது. மகிழ்ச்சி தருகிறது. எங்கள் கதைகள் புத்தகமாக வரும் சந்தோஷமே  ஒரு கனவாகத் தோன்றுகிறது.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு  முதலமைச்சர், மாண்புமிகு துணை  முதலமைச்சர் மாண்புமிகு கல்வி அமைச்சர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இப்புத்தகத்தை அரசுப் பள்ளிச் சிறார் எழுத்தாளர்களுக்குப் படைக்கிறோம்.

வெ.கற்பகலட்சுமி -பி.சந்தோஷ்

கும்பகோணம்

கீழே காணும் இப்புத்தகத்தைத் தரவிறக்கம் செய்ய, புத்தக  முகப்பு அட்டையைச் சொடுக்கவும்.





Wednesday, August 13, 2025

என் நண்பர்கள் எங்கே? - சா.ஹரிணி

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை,  2025 - 2026 க்கான, மூன்றாம் கட்ட,  வாசிப்பு புத்தகங்களை (81)வெளியிட்டுள்ளது.

81 புத்தகங்களில், 16 புத்தகங்கள் மாணவர்கள் எழுதியவை.  அதில் நம் பள்ளி மாணவி சா.ஹரிணி எழுதிய, 'என் நண்பர்கள் எங்கே?' என்ற கதையும் ஒன்று.

குன்று நம் பள்ளிக்கு வந்த அம்மா மாணவியை, நம் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி க.சரவணகுமாரி அவர்கள், புத்தகம் தந்து பாராட்டினார்.






முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...