குமரசாமி நினைவு நூலகத்தில், 14/11/25 அன்று, பிற்பகல் 1.00 - 1.40 வரை நடந்த கூட்டத்தில், ஜீவநதி புத்தகத்தைப் படி எடுத்து தந்த, சீ.அருந்ததிக்குப் பாராட்டு விழா நடந்தது.
கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் பாடசாலைப் பள்ளி நூலகத்தில் இருந்த, ஜீவநதி (தமிழாக்கம் : கி.ரா , 1965) அமெரிக்கச் சிறுகதைத் தொகுப்பை, நம் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி சீ.அருந்ததி படி எடுத்துத் தந்தார். அப்புத்தகத்தை, மலர் புக்ஸ் மறு பதிப்பு செய்துள்ளது. அப் புத்தகத்தில், இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
அவருக்கு, பேசும் கிளிகள் புத்தகம் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.



































